தமிழ்நாடு அரசு – தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “தமிழ்நாடு நாள்” விழா, சென்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களையும் ரூ.15,000/- பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.
திருக்குறள் பாவலர் த. தமிழ்மகிழ்நன் அவர்களிடம் திருக்குறள் முற்றோதல் பயிற்சி பெற்ற நமது பள்ளி மாணவர்கள் வீ. இளமதி, த. சாதனா, சி. மோனிஷ், சு. அரவிந்த் மற்றும் ர. பூஜா ஆகியோர் அமைச்சரால் பாராட்டுப் பெற்றனர்.
தந்தை பெரியார் ஈவெரா பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கி வாழ்த்திய பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களுக்கும், இறை திருக்குறள் பயிற்றக நிறுவனர் மற்றும் திருக்குறள் பாவலர் த. தமிழ்மகிழ்நன் அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் அவர்களுக்கும், திருக்குறள் முற்றோதல் பயிற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.